தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி குரு மஹராஜரின் அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை #72

தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி குரு மகராஜரின் அதிகாரபூர்வ மருத்துவ அறிக்கை #72

கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்த 70ஆம் நாள்

அக்டோபர் திங்கள் 24ஆம் நாள். புதன்கிழமை. இந்திய நேரப்படி இரவு 23:00 மணி.

அன்புடைய கடவுள் குடும்பம் சீடர்கள் மற்றும் ஜெயபதாக ஸ்வாமி குரு மஹராஜரின் நலன்விரும்பிகளுக்கு,

உங்கள் அனைவருக்கும் இந்த உன்னதமான தாமோதர மாத (கார்த்திகை) நல்வாழ்த்துக்களை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

பகவான் கிருஷ்ணரின் அதீதமான கருணையினால் குரு மகராஜ் தொடர்ச்சியாக தன் உடல் நிலையில் நிலை பற்றும் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்.

மிக அதிகமான நேரத்தை குரு மஹராஜர் தன் உடற்பயிற்சிக்காகவும், தன் உடலில் மருத்துவர்கள் பரிந்துரைத்த படி ஊட்டச்சத்து நிறைந்த உணவை ஏற்றுக் கொள்ள முயன்று வருகிறார். அவரால் 13 அக்டோபர் 2018 முதல் முகநூல் பக்கத்தில் நேரலையில் சொற்பொழிவாற்ற முடிகின்றது.
குரு மஹராஜருக்கு பேச்சு பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
தயவுசெய்து பகவான் தாமோதரரிடம் குரு மஹராஜர் பேசுவதை தெளிவாக கேட்க வேண்டும் என்பதால் அவருடைய குரல் வளம் விரைவாக குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்யலாம்.

தயவு செய்து புதிதாக வரக்கூடிய நபர்களை அதிகமாக அழைப்புவிடுத்து பகவான் தாமோதரன் புகழை இந்த உன்னதமான மாதத்தில் எடுத்துரைத்து நீங்கள் அதிகமாக காண்பிக்கும் நெய்தீபங்களின் கணக்குகளை குரு மஹராஜருடைய நலனுக்காக அர்ப்பணிக்கலாம். நாம் அனைவரும் ஒன்றுகூடி இந்த தாமோதர மாதத்தில் இலக்காக வைத்திருக்கும் 10 லட்சம் நெய் தீபங்களை எட்ட முயற்சிப்போமாக.

தயவு செய்து இதனுடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் குரு மஹராஜர் தாமோதர மாதத்தைப் பற்றி உரையாடியதை தாமோதரன் திருவுருவப் படத்தையும் நீங்கள் காணலாம்.

தயவுசெய்து உங்களுடைய பிரார்த்தனைகளை தொடர்ந்து அதைப் பற்றிய விவரங்களை புகைப்படங்களாகவோ, ஒளிநாடாக்களாகவோ அல்லது காணொளியாகவோ www.jayapatakaswami.com என்ற இணையதளத்திற்கு அனுப்புவதன் மூலம் குரு மஹராஜரை திருப்திப் படுத்துவதுடன் அவர் விரைவாக குணமடையவும் உதவும். இது அவர் ஸ்ரீல பிரபுபாதருக்காக செய்ய எண்ணம் பூண்டுள்ள அனைத்து ஆன்மீக சேவைகளையும் செய்ய உதவும்.

அடுத்த மருத்துவ அறிக்கை 31 அக்டோபர் 2018 அன்று வெளியிடப்படும் என்றும் அதன்பிறகு வாரம் ஒருமுறை உங்களுக்கு இந்த மருத்துவம் அறிக்கையானது அனுப்பப்படும் என்பதையும் குறித்து வைக்கவும்.

மருத்துவ குழு மற்றும் சேவை குழு சார்பாக,
உங்கள் சேவகன்,
மஹா வராஹ தாஸன்

Last updated by Admin Oct 25, 2018.

Translate

Radio

Please listen

© 2021   Created by ISKCON desire tree.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service