தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி குரு மஹராஜரின் அதிகாரப்பூர்வமான மருத்துவ அறிக்கை.

22 ஏப்ரல் 2018

 

அன்பான கடவுள் குடும்பம், சீடர்கள் மற்றும் குரு மஹராஜரின் நலன் விரும்பிகள் அனைவருக்கும்,

 

என் பணிவான நமஸ்காரங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். ஶ்ரீல பிரபுபாதருக்கு ஜெய்!

 

இன்று மதியம் 3 மணி அளவில் தனக்கு குளிர்வதாக குரு மஹராஜர் கூறினார் பின்பு ஒரு மணி நேரத்திற்குள்ளேயே அதிக காய்ச்சல் ஏற்பட்டது. டாக்டர் அச்சுதாநந்தா இதனை நிலைப்படுத்த முயற்சி செய்தார் ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் சுமார் 7 மணியளவில் குரு மஹராஜர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

குரு மஹராஜருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் கூறுகையில், "நோய் தொற்று அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாக கூறினார்."  ஆய்வுகள் மேற்க் கொள்ளப்பட்டு வருகின்றது.

 

இதனை பற்றிய அனைத்து தகவல்களையும் தங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். தயவு செய்து குரு மஹராஜரின் ஆரோக்கிய முன்னேற்றம் மற்றும் ஒட்டுமொத்த நலனுக்காக உங்கள் பிரார்த்தனைகளை தீவிரப்படுத்தவும்.

 

ஜெயபதாக ஸ்வாமி மஹராஜரின் சேவை குழு மற்றும் மருத்துவ குழு சார்பாக,

 

- மஹா வராஹ தாஸன்

Last updated by Admin Apr 23, 2018.

Translate

Radio

Please listen

© 2021   Created by ISKCON desire tree.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service