நீங்கள் ஒரு செயலை செய்யும் போது...
ஒரு முழுமையான ஏழை பிச்சைக்காரருக்கு ஒருவர் பெரிய நன்கொடை கொடுத்து அதன் பின் அவர் நல்லமுறையில் வாழ்ந்த ஒரு கதை உண்டு. ஆனால் அடுத்த பிறவியில் நன்கொடை கொடுத்த நபரின் மகனாக பிறக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏனெனில் பிச்சைக்காரர் தான் பெற்றுக்கொண்ட நன்கொடைக்கு கடன்பட்டிருந்தார். அந்த பிச்சைக்காரர் அதை திரும்ப செலுத்த முடியும் என்றால் அதற்கு ஒரே வழி அவருக்கு மகனாக பிறப்பது தான். ஒரு தந்தையாக நீங்கள் எப்போதுமே சேவை செய்கிறீர்கள் ஒரு தாயாக நீங்கள் எப்போதுமே குழந்தைக்கு சேவை செய்கிறீர்கள் அதே போல தான்... கர்ம விதியின்படி அந்த ஆத்மவை தான் மகனாக பெற்றெடுத்து கடன் திருப்பிச் செலுத்தப்பட்டது. நீங்கள் வெவ்வேறு நபர்களுக்கு சேவையை செய்கையில், படிப்படியாக அதற்குரிய சில எதிர்விளைவுகள் உங்களுக்கு வருவதை நீங்கள் பார்க்க முடியும். ஏனென்றால் அது பௌதீக அடிப்படையில் மட்டுமே செய்யப்படுகிறது. எனவே நீங்கள் செய்யும் சேவைகளில் எதிர்வினையை பெறாத விஷயங்களை எப்படிச் செய்வது என்பது பற்றிய ஒரு விஞ்ஞானம் உள்ளது.
பகவான் கிருஷ்ணர் கூறுவது யாதெனில், “நீங்கள் தானம், தவம், மேலும் நீங்கள் செய்யும் அணைத்து காரியங்களையும் எனக்கு அற்பனித்தீர்கள் என்றால் நான் உங்களுக்கு வரும் எதிர்வினையில் இருந்து பாதுகாப்பேன்.”
தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி
நியூ ஆர்லியன்ஸ்
அமெரிக்கா
தமிழ் மொழிபெயர்ப்பு: விக்ரம நித்யானந்த தாசன்